உலகக்கிண்ண கணிப்புகள்

Translated into Tamil (Original version)


உங்களுக்கு  பவுல் என்றழைக்கப் பட்ட  கணவாய் மீனை நினைவிருக்கிறதா? 2010 உலகக்கிண்ண போட்டிகளில்  ஜெர்மனியின் வெற்றிகளை கணித்துச் சொல்லும் நட்சத்திரமாக இருந்தது. இறுதிப்போட்டியின் வெற்றியாளரையும் அது சரியாகக் கணித்தது. 2008 யூரோ போட்டியில் தான் அவரது கணிப்புகள் ஆரம்பமானது, 13 போட்டிகளில் 11 போட்டிகளின் முடிவை அவர் சரியாகக் கணித்தார்.  ஒவ்வொரு ஆட்டத்திலும் பங்குபெறும் அணிகளின் தேசியக் கொடிகளின் இலச்சினை கொண்டஉணவுப் பெட்டிகளை  தெரிந்தெடுக்கும் போக்கிலிருந்து வெற்றி கணிக்கப்பட்டது . துரதிருஷ்டவசமாக, அது 2010 ஆம் ஆண்டின்இறுதியில் இறந்துவிட்டது

பால் மட்டுமல்ல. கூடவே ஹாரி முதலையும் 2010 உலகக்கிண்ண வெற்றியாளரை சரியாகவே கணித்தது மேலும், அவர் தொடர்ந்து இரண்டு ஆஸ்திரேலிய மத்திய தேர்தல் முடிவுகளைக் கணிக்க முடிந்தது. இருப்பினும், அவர் ஜெர்மன் கணவாய் மீனைப் போல பிரபலமாக விளங்கவில்லை. சிங்கப்பூர் கிளியான மணியும்கூட சோபிக்க வில்லை, ஏனெனில் 2010 உலகக்கிண்ணக் காலிறுதி,  அரையிறுதி வெற்றியாளர்களை சரியாகக் கணித்தாலும், ஸ்பெயின், நெதர்லாந்து ஆகிய  இரு இறுதிப் போட்டியாளர்களில் வெற்றியாளரைக் கணிக்க தவறியது.

பவுலின் அகால மரணத்திற்குப்பின், அவரது கிரீடம் யாருக்கென பெரும் போட்டி ஏற்பட்டுள்ளது. யூரோ 2012 போது, இந்த விளையாட்டை விளையாட மூன்று விலங்குகள் இருந்தன: போலந்து  கிரகாவ்  உயரியல் பூங்காவில் வாழும் சீத்தா என்றழைக்கப்படும் இந்திய யானையும் அவற்றுள் ஒன்றாகும். பிரெட் எனப்படும் உக்கிரைன் வீஸல் பூனையின் பதிவுகளை  ட்விட்டரில் காணலாம் மேலும்  பன்டிக் எனப்படும் ஜோசியப் பன்றி மூன்றில் இரண்டு போட்டிகளின் முடிவுகளை சரியாகக் கணிக்க இயலும்.

உலகக்கிண்ணப் போட்டிகளில் பவுல் கணவாய் மீனின் இடத்தை பிடிக்க போவது  யார்? அது போப்பின் ஆசி பெற்ற  புனித பீட்டர் சதுக்கத்தை சேர்ந்த தேசிய ஒலிபரப்பாளாரன இத்தாலியக் கிளியா? அல்லது அது 33 போட்டிகளில் 30 முடிவுகளை  சரியாகக் கணித்த   நெல்லி எனப்படும் ஜெர்மன் யானை இருக்குமா? சீன அரசு ஊடக ஆதரவு பெற்ற கரடிக்குட்டியின் ஜோசியப்புலமை குறித்தும் குறைத்து மதிப்பிட வேண்டாம்.

அமோர் எனப்படும் இத்தாலியக் கிளி( இத்தாலியில்- காதல்) ஒரு சிறிய கால்பந்து மைதானத்தில் இருக்கும் கொடியை தெரிந்ததெடுக்கும் போக்கின்  மூலம்  தனது கணிப்பை கொடுக்கும். நெல்லி பந்தை போட்டியிடும் நாடுகளின் கொடிகள் கொண்ட வலைக்குள் உதைப்பதைக் கொண்டு வெற்றியாளரைக் கணிக்க விரும்புகிறது பதிலாக  பண்டா கரடிக்குட்டி தொடக்கப் போட்டிகளில் உணவுப் பெட்டியை தெரிவு செய்வதின் மூலமும் பின்னர்  நாக்அவுட் போட்டிகளில் கொடிபறக்க விடப்பட்ட மரத்தில் ஏறுவதன் மூலமும் கணிக்கும்.

உங்களிடம்  ஒரு செல்லப்பிராணி இருக்கிறதா?
அது சிறப்பாகக் கணிக்குமா? எப்படி?
அவைகளும் ஒரு ஷாட் கொடுக்கட்டும்!

by Jamal Hassan

0 Votes
#892 of #1440 in the World
#3 of #3 for Tamil


Jamal Hassan's website

Go to the ranking page for Tamil

Can you translate better?

Join the challenge